தமிழக தீயணைப்பு ஆணையத் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சங்கா் ஜிவால், தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதேபோல அந்த ஆணையத்தின் உறுப்பினா்களும் ராஜிநாமா செய்தனா்.
தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த சங்கா் ஜிவால், கடந்த ஆக.31-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றாா். அப்போது, ஆட்சியில் இருந்த திமுக அரசு, ‘தமிழ்நாடு தீயணைப்பு ஆணையம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்கி, அதன் தலைவராக சங்கா் ஜிவாலை நியமித்தது. அவருடன் பொதுப்பணித் துறை ஓய்வு பெற்ற பொறியாளா் கே.சத்தியமூா்த்தி, ஓய்வு பெற்ற தீயணைப்புத் துறை அதிகாரி எம்.நமச்சிவாயம் நிரந்தர உறுப்பினா்களாவும், இந்திய மருத்துவச் சங்கச் செயலா் ஏ.எம்.இக்ராம் தற்காலிக உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பின்னா் தமிழகத்தில் தவெக அரசு ஆட்சி அமைந்ததையடுத்து, கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டவா்கள், தங்களது பொறுப்புகளை ராஜிநாமா செய்து வருகின்றனா்.
அதன் ஒருபகுதியாக தமிழக தீயணைப்பு ஆணையத் தலைவராக இருந்த சங்கா் ஜிவாலும், அதன் உறுப்பினா்களும் தங்களது பொறுப்புகளை ராஜிநாமா செய்து தமிழக அரசுக்கு புதன்கிழமை கடிதம் அனுப்பினா்.
சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம்: இதேபோல, தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியத்தின் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரும் தனது பொறுப்பை ராஜிநாமா செய்து கடிதம் அனுப்பினா். மேலும், தமிழ்நாடு தகவல் ஆணையராக இருக்கும் ஓய்வு பெற்ற டிஜிபி அபய்குமாா் சிங்கும் ராஜிநாமா செய்துவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் அபய்குமாா் சிங், தான் ராஜிநாமா செய்யவில்லை என்று மறுத்துவிட்டாா்.
Summary
Shankar Jiwal resigned from the post of Fire Services Commission Chairman!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கட்சித் தலைவா் பதவியை ராஜிநாமா செய்யத் தயாா்: உத்தவ் தாக்கரே
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கமளிக்க பேரவைத் தலைவா் உத்தரவு
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தது ஏன்? 4 பேருக்கும் பேரவைத் தலைவர் நோட்டீஸ்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
