சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தின் கார்கோ பகுதியில் கேட்பாரற்று ஒரு பார்சல் கிடந்துள்ளது.
இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அதனை பறிமுதல் சோதனை செய்தனர். அப்போது, அதில் இருந்தது மெத்தாம்பேட்டமைன் என்ற போதைப் பொருள்கள் என்பது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.5 கோடி என தெரிவித்தனர்.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில் ரசாயன பவுடர் என்ற பெயரில் மலேசியாவுக்கு போதைப் பொருளை கடந்த முயன்றது தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் விமான நிலையத்துக்கு எங்கிருந்து வந்தது குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் சிசிடிவி காட்சி உதவியுடன் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதால் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெத்தாம்பேட்டமைன் போதைப்பொருள் உற்பத்திக்கு சூடோ எபிட்ரின் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Regarding the seizure of narcotics worth ₹5 crore found unclaimed at Chennai Airport...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் குறைப்பு! காரணம் என்ன?

அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஈரான் தாக்கிய சில மணிநேரங்களில்! குவைத்தில் இருந்து மீண்டும் விமானங்கள் இயக்கம்!
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


