விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

முதல்வர் விஜய்யுடன் சிட்டி யூனியன் வங்கி உயர் அலுவலர்கள் சந்திப்பு!

முதல்வர் விஜய்யுடன் சிட்டி யூனியன் வங்கி உயர் அலுவலர்கள் மரியாதை நிமித்த சந்திப்பு.

News image

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யுடன் சிட்டி யூனியன் வங்கியின் மேலாண் இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான ஆர். விஜய் ஆனந்த், வங்கியின் தலைவர் ஜி. மகாலிங்கம்

Updated On :17 ஜூன் 2026, 3:50 pm IST

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யுடன் சிட்டி யூனியன் வங்கி மேலாண் இயக்குநர், தலைமைச் செயல் அதிகாரி ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜோசப் விஜய்யை சிட்டி யூனியன் வங்கியின் மேலாண் இயக்குநரும் தலைமைச் செயல் அலுவலருமான ஆர். விஜய் ஆனந்த், வங்கியின் தலைவர் ஜி. மகாலிங்கம் ஆகியோர் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இந்தியாவில் உள்ள மிகப் பழமையான தனியார் வங்கிகளில், சிட்டி யூனியன் வங்கியும் ஒன்று. 1904ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் வங்கி நிறுவப்பட்டது. நாட்டு மக்களுக்கான சேவையில், சிட்டி யூனியன் வங்கி கடந்த 121 ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது.

நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளுடனும், 1700க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களுடனும் மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

சிட்டி யூனியன் வங்கியானது, ஆண்டுதோறும் நிகர லாபத்தை அடைந்து பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை வழங்கி வருகிறது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, வங்கியின் மொத்த வணிகத் தொகை ரூ.1,45,007 கோடி. 2025 - 26ஆம் ஆண்டு, வங்கியின் நிகர லாபம் ரூ.1,326 கோடியாக உள்ளது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களின் தேவைகளை மிகச் சிறப்பாக நிறைவு செய்து வருவதில் சிட்டி யூனியன் வங்கி முன்னணியில் உள்ளது.

சாவிக்கொத்துகள், ஃபிட்னஸ் வாட்ச் மூலம், டேப் செய்து பணம் செலுத்தும் வசதி, மொபைல் பேங்கிங் பயன்படுத்தும்போது, உள்நுழைவதற்கான குரல்வழி அங்கீகாரம், பல்வேறு மொழிகளில் ஒலி வடிவிலான அரட்டை வசதி, குரல்வழி UPI123 பணம் செலுத்தும் வசதி, முழுமையாக டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் வசதி, மோசடியாளர்களை அடையாளம் காணும் வகையில் நேப் ஐடி ஆகியவை வங்கியால், வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

City Union Bank senior officials meet Chief Minister Vijay!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.