கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் கொலை வழக்கில், குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குழந்தை பாலியல் கொலை வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார், மூன்று பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், குழந்தை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி உள்கோட்டம் சிப்காட் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில், ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது.
உடனடியாக இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவத்தில் ஒருவர் மட்டுமே ஈடுபட்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரும் பாதிக்கப்பட்ட குழந்தையும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இது குறித்த கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக சரிபார்க்கப்படாத தகவல்கள் மற்றும் பொய்யான செய்திகளை எந்த ஒரு ஊடகத்திலும் பரப்புவதை மக்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியைச் சேர்ந்த புதுப்பேட்டை பகுதியல் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வாடகை வீடுகளில் தங்கி, அங்குள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டரை வயது குழந்தை பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு, படுகாயங்களுடன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை பலியானது.
Summary
Gummidipoondi child sexual assault and murder: Sudden twist in the investigation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டி: அதிக ரத்தப்போக்குடன் குழந்தை அனுமதி! ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பேட்டி
சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி

குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி
மதமாற்றம் செய்து திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக இளம்பெண் புகாா்: ஜாமியா நகரில் 4 போ் கைது
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

