மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்ல பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் ரமேஷ் அவரது போனை பாதுகாப்பறையில் வைத்து விட்டு கோயிலுக்குள் சென்றார்.
கோயிலுக்குள் சென்ற அமைச்சர் ரமேஷ், பிரசாதம் தயாரிக்கும் இடம், பக்தர்கள் செல்லும் வரிசை, கூட்ட மேலாண்மை, கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொண்டார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு பணிகள், குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதற்காக, இன்று நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தோம்.
90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. 10 சதவீத பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அதிகாரிகளுடன் ஆய்வு செய்த பிறகு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், குடமுழுக்குக்கு முன்னதாக யாக சாலை பூஜை வளர்ப்பது, உள்ளிட்ட பணிகள் குறித்து விரிவாக வெளியிடப்படும்.
ஒட்டுமொத்தமாக கோயில்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் களையப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Ramesh, the Minister for Hindu Religious and Charitable Endowments, conducted an inspection at the Madurai Meenakshi Amman Temple.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் ரமேஷ் | TVK

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ரமேஷ்! | TVK

சுவாமிமலையில் தயாரிக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மதுரை வி.மீனாட்சிபுரம் கோயிலில் பிரதிஷ்டை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிக் கொலை!
விடியோக்கள்

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
தினமணி செய்திச் சேவை

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

ராசாதி ராசா பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


