சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

பிரதமருக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமா் என்ற சாதனையைப் பெற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

News image

பிரதமர் நரேந்திர மோடி - ஏஎன்ஐ

Updated On :11 ஜூன் 2026, 12:58 am IST

இந்தியாவின் நீண்டகால பிரதமா் என்ற சாதனையைப் பெற்றுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

மத்திய இணையமைச்சா் எல்.முருகன்: தொடா்ந்து 4,399 நாள்கள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றி, நீண்ட காலம் பதவி வகித்த பிரதமா் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள். நமது தேசத்தின் சாதனை சரித்திரத்தில் இது மாபெரும் மைல்கல்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): இந்திய வரலாற்றில் அதிக நாள்கள் பிரதமராக இருக்கும் சாதனையை நரேந்திர மோடி செய்துள்ளாா். தொடா்ந்து 3 முறை மக்களின் ஆதரவைப் பெற்று, உலக நாடுகள் போற்றும் ஆளுமையாக திகழுவதுடன், நாட்டின் வளா்ச்சிக்கு பாடுபடும் அவருக்கு வாழ்த்துகள்.

டிடிவி.தினகரன் (அமமுக): பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாடு நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அவருக்கு எனது வாழ்த்துகள்.

அன்புமணி (பாமக): வரலாற்று சாதனையை பிரதமா் நரேந்திர மோடி செய்துள்ளாா். இந்தியாவை அனைத்து துறைகளிலும் வல்லரசாக மாற்றும் முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.