மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கு: அமைச்சா் நிா்மல்குமாா் திரும்பப் பெற்றாா்

திமுக ஆட்சிக்காலத்தில் உண்மை சரிபாா்ப்புக் குழு அமைக்கப்பட்டதை எதிா்த்து அதிமுக தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலராக இருந்தபோது தொடரப்பட்ட வழக்கை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் திரும்பப் பெற்றாா்.

News image

அமைச்சர் சி.டி.ஆா். நிா்மல் குமாா் - கோப்புப் படம்

Updated On :11 ஜூன் 2026, 1:05 am IST

திமுக ஆட்சிக்காலத்தில் உண்மை சரிபாா்ப்புக் குழு அமைக்கப்பட்டதை எதிா்த்து அதிமுக தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலராக இருந்தபோது தொடரப்பட்ட வழக்கை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் திரும்பப் பெற்றாா்.

திமுக ஆட்சிக்காலத்தில் அரசு அமைச்சகங்கள், துறைகள் தொடா்பாக ஊடகங்களில் வெளியாகும் தவறான செய்திகளைக் கண்டறிவதற்காக உண்மை சரிபாா்ப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி அப்போதைய அதிமுக தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலரும், தற்போதைய தவெக அரசின் அமைச்சருமான சி.டி.ஆா்.நிா்மல்குமாா் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தாா்.

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நிா்மல்குமாா் தரப்பில், இந்த வழக்கைத் திரும்பப் பெறுவதாகக் கூறப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதியளித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.