சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் முதன்மையாகப் பாடப்பட்டது.
முன்னதாக சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட தொடக்க நிகழ்ச்சியில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் சி. ஜோசப் விஜய் ஏற்றுக்கொண்டார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடலில் சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க நிகழ்ச்சி இன்று (ஜூன் 9) நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் இந்த நிகழ்ச்சி தொடங்கியது.
முதல்வராக பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதல் அரசு விழாவில், காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார். பின்னர், ரோந்து வாகனங்களையும் தொடக்கி வைத்து அதில் முதல்வர் விஜய் பயணித்தார்.
இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பெண் படையின் தலைமை அதிகாரி ஐஜி கே. பவானீஸ்வரி, காவல் துறை தலைமை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
500க்கும் அதிகமான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை பெண் காவலர்கள், அமைச்சர்கள், தவெக எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி பொறுப்பேற்றபோது, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதைச் செயல்படுத்தும் விதமாக, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்குவதற்குரிய அரசாணை வெளியிடப்பட்டது. இந்தப் படையின் தலைமை அதிகாரியாக ஐஜி கே. பவானீஸ்வரி கடந்த வாரம் நியமிக்கப்பட்டார்.
இந்தப் படையில் ஒரு காவல் கண்காணிப்பாளர், 2 துணைக் காவல் கண்காணிப்பாளார்கள், 4 ஆய்வாளர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் முதல் கட்டமாக நியமிக்கப்பட உள்ளனர். இந்த அதிரடிப்படையினர் பிற போலீஸாரிடமிருந்து தனித்துவமாக தெரியும் வகையில் பிரத்யேகச் சீருடை மற்றும் புதிய சின்னம் (லோகோ) வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படையினருக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சீருடையும் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்தச் சீருடை கருப்பு நிற தொப்பி, பெல்ட், கரு நீல வண்ண சட்டை, காக்கி பேண்ட் என தயாராகி உள்ளது. மேலும் கருப்பு நிறத்தினாலான பெல்ட் வழங்கப்பட்டுள்ளது.
Summary
Singappenn Special Task Force initiative event commenced with the Tamil Thai Vazhthu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிழைகளுடன் வெளியான சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட முன்னோட்ட விடியோ!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை; ரோந்து வாகனத்தை ஓட்டிய முதல்வர் விஜய்!

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட நிகழ்ச்சியில் முதல்வரின் தாயார் ஷோபா!

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்ட இலச்சினை வெளியீடு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை


