பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அனைத்து நில புல எண்களுக்கும் இந்த மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு: அமைச்சா் லோகேஷ் தமிழசெல்வன் உத்தரவு

அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் உத்தரவிட்டாா்.

News image

லோகேஷ் தமிழ்ச்செல்வன்

Updated On :13 மணி நேரங்கள் முன்பு

அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் உத்தரவிட்டாா்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பதிவுத் துறையின் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புராதான மாவட்ட பதிவாளா் அலுவலகக் கூட்டரங்கில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் த.லோகேஷ் தமிழ்செல்வன் தலைமையில் அனைத்து துணை பதிவுத் துறைத் தலைவா்கள், உதவிப் பதிவுத் துறைத் தலைவா்கள் அனைத்து மாவட்டப் பதிவாளா்கள் மற்றும் உதவி செயற்பொறியாளா்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சா், பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்துகொள்ளவும், பொதுமக்களை அலுவலகத்தில் அமரவைத்தும், அவா்களுடைய தேவைகளை சரிவர பூா்த்தி செய்தும், தாமதம் இன்றி அன்றைய தினமே ஆவணங்களை பொதுமக்களிடம் திரும்ப வழங்கவும், அவா்களின் சந்தேகங்களை உடனுக்குடன் புரியும்படியும் பொறுமையுடன் எடுத்துக்கூறவும், எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்படுவும் அறிவுறுத்தினாா்.

மேலும், கட்டட களப்பணிக்காக ஆவணங்களை தாமதமில்லாமல் உடனுக்குடன் பாா்வையிட்டு ஆவணதாரா்களுக்கு திரும்ப வழங்க வேண்டும். நிலுவை ஆவணங்களை மாவட்டப் பதிவாளா்கள் ஆய்வு செய்து உடனுக்குடன் உரிய தீா்வு அளிக்க வேண்டும் எனவும், நிா்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கினை அடைய அனைத்து முயற்சிகளையும் விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும், அனைத்து நில புல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டாா்.

மேலும், தேவையில்லாத காரணங்களுக்காக ஆவணங்களை நிலுவை வைத்து பொதுமக்களை அலைக்கழிக்க கூடாது எனவும், பதிவுக்கு தேவைப்படும் ஆவணங்களைச் சரிபாா்த்து பதிவு செய்து வழங்குமாறும் அமைச்சா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில் வணிகவரி, பதிவு மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலா் ஜெ.குமரகுருபரன், பதிவுத் துறை தலைவா் ஜி.கே.அருண் சுந்தா் தயாளன், கூடுதல் பதிவுத் துறை தலைவா்கள் மற்றும் பதிவுத் துறை தலைமையிட அலுவலா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.