தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் வெளிமாநிலத்தவர் வாக்களித்து திரும்பியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டினர் வாக்களித்திருக்கலாம் என்று கருதும் பதிவுகளை மத்திய மற்றும் மாநில சட்டம் ஒழுங்கு விசாரணை அமைப்புகள், தேர்தல் ஆணையத்திடம் கோரியிருக்கின்றன. மேலும், தேர்தல் நாளுக்கு முன்பு தமிழகம் வந்து, ஏப். 23ஆம் தேதியிலிருந்து ஒரு சில நாள்களுக்குப் பின் வெளிநாடு சென்றவர்களின் விவரங்களையும் இந்திய குடியுரிமைத் துறையிடம் கோரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தேர்தலில் வாக்களித்த 40 வெளிநாட்டினர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இந்த விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கும் விசாரணை அமைப்பு, இதுபோல தேர்தலுக்கு முன்பு வந்து, வாக்களித்துவிட்டு தேர்தல் முடிந்ததும் உடனடியாக வெளிநாடு திரும்பியவர்கள் யாரேனும் இருக்கலாம் என்பதால், அவர்களையும் கண்டுபிடிக்க, விசாரணை அமைப்புகள் தீவிரம்காட்டி வருகின்றன.
மேலும், வாக்களிப்பதற்காக பல்வேறு நகரங்களிலிருந்து தமிழகம் வந்தவர்களின் சமூக வலைத்தளக் கணக்குகளையும் காவல்துறை அதிகாரிகள் ஆராய்ந்து வருகிறார்கள்.
சிறப்புத் தீவிர திருத்த முறையின்போது, எவ்வாறு இவர்களது பெயர்கள் மட்டும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படாமல் போனது என்பது குறித்தும் ஆராய உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வாழ்ந்துகொண்டு, இந்தியாவில் வாழ்வதாக அவர்கள் தெரிவித்து வாக்குரிமை பெற்றிருந்தால், இது மிகப்பெரிய குற்றம் என்றும், மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மே மாதம் இரண்டாவது வாரத்தில் மதுரை, சென்னை விமான நிலையங்களிலிருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் செல்லவிருந்த வெளிநாட்டினரின் ஆள்காட்டி விரலில் அழியாத மை இருந்ததை, சுங்கத் துறையினர் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் தமிழ்நாட்டில் வாக்களித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இதுபோல, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டனில் வாழ்ந்துவரும் ஒருவரும், சென்னை வேளச்சேரி தொகுதியில் வாக்களித்ததை ஒப்புக் கொண்ட நிலையில் சென்னை விமான நிலையத்தில அவர்கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.
தீவிர திருத்தப் பணியின்போது, இவர்களது சார்பில் வேறு யாரோ கையெழுத்திட்டு படிவங்களை வழங்கி, இவர்களது வாக்குரிமையை நிலைத்திருக்கச் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் வாழ்பவர்கள் பலரின் வாக்குரிமைகள் இந்த தீவிர திருத்த நடைமுறையால் பறிபோன நிலையில், வெளிநாடுகளிலிருந்து வந்து வாக்களித்து பலரும் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழ்நாட்டில் வாக்குரிமையை இழந்த பலருக்கும் பெரும் வேதனையை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறப்படுகிறது.
Summary
Foreigners voting in the election! Sudden turn in the investigation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிசோரமில் மாநிலங்களவை தேர்தல்: முதல்வர் லால்துஹோமா வாக்களித்தார்!

திடீர் மழை, நீண்ட வெய்யில்: பருவமழைக்கு வில்லனாகும் எல்-நினோ! தமிழகத்துக்கு?

திருச்சியில் வாக்களித்த இலங்கை குடிமகன்: போலீஸாா் விசாரணை

மேற்கு வங்க வாக்குப்பதிவு விறுவிறு! ரிக்ஷாவில் வந்து வாக்களித்த மஹுவா மொய்த்ரா!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

