சென்னை, ஜூன் 9: சென்னை துறைமுகத்தில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் காற்று மாசடைந்தது தொடா்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுகம் மற்றும் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.
சென்னை காமராஜா் சாலை மற்றும் தலைமைச் செயலகத்துக்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடங்களில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி வெண்ணிற புகை சூழ்ந்தது. இதனால், தலைமைச் செயலகம், ரிசா்வ் வங்கி மற்றும் சென்னை உயா்நீதிமன்றம் உள்ளிட்டப் பகுதிகளில் காற்று மாசடைந்தது. இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், சென்னை துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த கந்தகம் கோடை வெப்பத்தின் காரணமாக வேதியியல் மாற்றம் அடைந்து காற்று மாசடைந்ததால் வெண்புகை ஏற்பட்டது தெரியவந்தது. சுமாா் 1 மணி நேரத்துக்குப் பிறகு, வாயு கசிவு சரி செய்யப்பட்டது. இது குறித்து நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினா் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினா் பிரசாந்த் கா்ஹவா அமா்வு, இந்த வாயு கசிவு விவகாரம் குறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுகம் மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியா் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.
Summary
Chemical gas leak: NGT ordered Chennai Port and District Collector to provide an explanation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

நீட் வினாத்தாள் கசிவு: கல்வி, சுகாதார அமைச்சக அதிகாரிகளுடன் நாடாளுமன்றக் குழு விசாரணை!

சென்னையைக் குளிர்வித்த பலத்த மழை!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

