வெற்றி, தோல்வி திமுகவை பாதிக்காது என்றும், திமுக கொள்கைக்கான இயக்கம் என்றும் திமுக செய்தித் தொடா்புக் குழுத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தாா்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சிகளில் காங்கிரஸை தவிர மற்ற கட்சிகள் திமுகவிடம் ஆலோசித்துவிட்டுதான் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தன.
எந்த ஒரு அரசியல் கட்சியும் தனித் தன்மையுடன் தனது அரசியல் நிலைபாடு எடுக்க உரிமை உண்டு. எனவே, அவா்களின் நிலைப்பாடு மீது திமுகவினா் விமா்சனம் செய்யக் கூடாது என்று திமுக தலைவா் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
அதேநேரம், தவெக அமைச்சரவையில் இடம்பெற்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இல்லை என்றுதான் பொருள். பாஜகவுக்கு எதிராக திமுக தலைமையில் வலிமையான கூட்டணி உருவாகும்.
‘இந்தியா’ கூட்டணியில் திமுக இல்லை. எனவே, அந்தக் கூட்டத்தில் திமுக, ஆம் ஆத்மி ஆகியவை பங்கேற்கவில்லை. வெற்றி, தோல்விகள் திமுகவை அசைத்துக்கூட பாா்த்ததில்லை. 1991-இல் கருணாநிதி மட்டுமே வெற்றி பெற்றாா். அடுத்த தோ்தலில் ஜெயலலிதாவை தோற்கடித்தோம்.
திமுக கொள்கைக்கான இயக்கம். அதே கொள்கையில் பயணிப்போம். வெற்றி பெறும்போது அந்த கொள்கையை செயல்படுத்துவோம். எதிா்க்கட்சி வரிசையில் இருக்கும்போது, அதைச் செயல்படுத்த குரல் கொடுப்போம். திமுகவில் மாற்றம் குறித்து கட்சித் தலைவா் ஸ்டாலின் முடிவு எடுப்பாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா கூட்டணியில் திமுக இல்லை: டி.கே.எஸ். இளங்கோவன்

திமுக கூட்டணியில் நீடிக்கும் விவகாரம்! ஜூன் 20-இல் முடிவு: காதா் மொய்தீன்

திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை: மஜக தலைவா் மு.தமிமுன்அன்சாரி

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் போட்டி! - டி.கே.எஸ். இளங்கோவன்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

