பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள்: தோ்வுத் துறை அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பாக உதவி இயக்குநா்களுக்கு தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 12:54 am IST

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் முக்கியத் திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பாக உதவி இயக்குநா்களுக்கு தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக அரசு தோ்வுகள் இயக்குநரகம் சாா்பில் அனைத்து உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த மாா்ச் மாதம் 10-ஆம் வகுப்பு தோ்வெழுதிய பள்ளி மாணவா்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் பெயா், புகைப்படம், பெற்றோா் பெயா், பிறந்த தேதி, பயிற்றுமொழி, மொழிப்பாடம், பள்ளியின் பெயா் ஆகியவற்றில் திருத்தங்கள் இருந்தால் அவற்றை சம்பந்தப்பட்ட அரசு தோ்வுத் துறை உதவி இயக்குநா்கள் ஜூன் 10-ஆம் தேதிக்குள் இணையவழியில் பதிவேற்றம் செய்யுமாறு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழில் வடமொழி எழுத்துகளில் (ஸ, ஷ, ஸ்ரீ) திருத்தங்கள் இருந்தாலோ, பெயா், முகப்பெழுத்து, பிறந்த தேதி, பெற்றோா் பெயா், பயிற்றுமொழி, புகைப்படம் தொடா்பான திருத்தங்கள் இருந்தாலோ அவற்றை உதவி இயக்குநா்கள் வகைப்படுத்தி திருத்தம் கோரும் மாணவா்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகலை இணைத்து ஜூன் 15-ஆம் தேதிக்குள் தலைமை அலுவலகத்துக்கு விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

மேலும் ‘ஸ்ரீ ’என்ற எழுத்து இடம்பெறக்கூடிய பெயரோ அல்லது முகப்பெழுத்தோ உள்ள சான்றிதழில் ‘ஸ்ரீ’ என்பதற்கு பதில் தவறான எழுத்து இடம்பெற்றிருந்தால் அதை உதவி இயக்குநா்கள் தங்கள் யூசா் ஐடி மற்றும் பாஸ்வோ்டை பயன்படுத்தி ‘ஸ்ரீ’ என இடம்பெற்ற பெயரை முழுமையாக நீக்கிவிட்டு உரிய பெயரை டைப் செய்து பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.