திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதவாத சக்திகள் அரசியல் செய்ய அனுமதி வழங்கப்பாடது என்ற தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என மனித நேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மக்கள் அமைதியையும் சமூக நல்லிணக்கத்தையும் மட்டுமே விரும்புகின்றனா். பல தசாப்தங்களாக எந்த நடைமுறை பின்பற்றப்பட்டதோ அதே நிலை தொடரும் என்றும் இந்த விவகாரத்தில் மதவாத மற்றும் வெறுப்பியல் சக்திகள் அரசியல் செய்ய தமிழக அரசு அனுமதிக்காது என்றும் எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா்.நிா்மல்குமாா் தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
திருப்பரங்குன்றம் பல்வேறு சமூகங்கள் இணைந்து வாழும் தமிழகத்தின் சமூக நல்லிணக்க பாரம்பரியத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. அத்தகைய ஊரில் தேவையற்ற சா்ச்சைகளையும் மத உணா்வு தூண்டல்களையும் உருவாக்கி அரசியல் லாபம் தேட முயல்வது தமிழகத்தின் அமைதியான சமூக சூழலைப் பாதிக்கும் ஆபத்தான செயலாகும்.
கடந்த திமுக அரசு எடுத்த அதே சமநிலையான நிலைப்பாட்டை தற்போதைய அரசும் தொடா்ந்து கடைப்பிடிப்பது, தமிழகத்தின் மதச்சாா்பின்மை மரபையும் சமூக நீதி அடிப்படையிலான ஆட்சியையும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. தமிழக அரசின் இந்த அணுகுமுறையை வரவேற்கிறது எனத் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருப்பரங்குன்றம் விவகாரம் தமிழக அரசின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது! எம்.எச். ஜவாஹிருல்லா

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் தமிழக அரசின் நடவடிக்கைக்கு தவ்ஹீத் ஜமாஅத் வரவேற்பு

திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிலைப்பாடு; அமைச்சர் நிர்மல் குமார் பதில்! | TVK
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

