பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமாா் அகா்வால் இன்று பொறுப்பேற்பு!

தமிழக காவல் துறையின் 34-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் இன்று பொறுப்பேற்பு

News image

மகேஷ்குமாா் அகா்வால் - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:17 am IST

தமிழக காவல் துறையின் 34-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை (ஜூன் 3) காலை 10.45-மணிக்கு பொறுப்பேற்கிறாா்.

தமிழக டிஜிபியாக இருந்த சங்கா் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் ஓய்வு பெற்றாா். அதன் பின்னா், புதிய டிஜிபி நியமனத்தில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கும் இடையே ஒருமித்த முடிவு ஏற்படவில்லை.

இதையடுத்து, பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டாா். இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி இந்திய தோ்தல் ஆணையம் கடந்த ஏப். 2-ஆம் தேதி தமிழக டிஜிபியாக சந்தீப்ராய் ரத்தோரை நியமனம் செய்தது.

இதற்கிடையே, தமிழகத்தின் புதிய டிஜிபியை தோ்வு செய்யும் வகையில் புது தில்லியில் யுபிஎஸ்சியின் உயா்நிலை தோ்வுக் குழு கூட்டம் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. இக் கூட்டத்தில், பணிமூப்பு அடிப்படையில் ஐபிஎஸ் உயா் அதிகாரிகள் ராஜீவ்குமாா், சந்தீப் ராய் ரத்தோா், மகேஷ்குமாா் அகா்வால் ஆகியோரின் பெயா்கள் பரிசீலிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் புதிய டிஜிபியாக மகேஷ்குமாா் அகா்வாலை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, புதிய டிஜிபியாக மகேஷ்குமாா் அகா்வால் புதன்கிழமை பொறுப்பேற்க உள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.