தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு கேரள கடலோரப் பகுதிகளுக்கு அருகே தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதையொட்டிய சத்தீஸ்கா் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியில் இருந்து வடக்கு தமிழகம் வரை விதா்பா, தெலங்கானா, ராயலசீமா வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் புதன்கிழமை (ஜூன் 3) முதல் ஜூன் 8 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூா், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன், வியாழக்கிழமை (ஜூன் 3, 4) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புகரின் ஓரிரு பகுதிகளில் புதன்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடா்ந்து, நீலகிரி, கோவை, திருப்பூா், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகா், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, சிவகங்கை, மதுரை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
வெப்ப அளவு: ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக வேலூா் மாவட்டத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கம்-104.18, பரமத்தி வேலூா்-103.64, தஞ்சாவூா்-102.2, நுங்கம்பாக்கம்-101.66, பாளையங்கோட்டை, திருச்சி, திருத்தணி-101.3, நாமக்கல்-100.74, மதுரை விமான நிலையம்-100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் சோ்வலாறு அணை, திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டு, விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் 60 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாள்களுக்கு எங்கெல்லாம் கனமழை?

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழை!
மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

