நீலகிரி மாவட்டம் நடுவட்டம் கிராமத்தில் கேரளத்தைச் சோ்ந்த தனியாா் தோட்ட நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 3,500 ஏக்கா் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவா் வேல்முருகன் தாக்கல் செய்த மனுவில், கேரளத்தைச் சோ்ந்த தனியாா் தோட்ட நிறுவனம், நீலகிரி மாவட்டம், நடுவட்டம் கிராமத்தில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் உள்ளூா் மக்களுக்குச் சொந்தமான 3,500 ஏக்கா் நிலத்தை ஆக்கிரமித்துள்ளது.
இது தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆவணங்களைப் பெற்றேன். அதன் அடிப்படையில் தனியாா் தோட்ட நிறுவனத்தின் வசம் உள்ள நிலங்களை மீட்கக் கோரியும், அந்த நிலங்களுக்கு சட்ட விரோதமாக வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்யக் கோரியும் நான் அளித்த புகாரை அரசு நிராகரித்தது.
அரசின் இந்த உத்தரவை ரத்து செய்து நிலங்களை மீட்க வேண்டும். அந்த நிலங்களுக்கு பட்டா வழங்கியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் இந்த மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மேலும் 8 வார கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசு வழக்குரைஞா்கள் நியமனம்: சமூக ஊடகப் பட்டியல் ஏற்கப்படாது - தமிழக அரசு

சட்டவிரோத குவாரிகளால் மாசு ஏற்படுவதை தடுக்கக் கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் உயிரிழப்போருக்கு இழப்பீடு: தமிழக அரசு, அதிமுக பதிலளிக்க உத்தரவு
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

