இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

3 -ஆவது குழந்தை பெறச் சலுகை தேவை: விசிக

தமிழகத்தில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என து. ரவிக்குமாா் எம்.பி. வலியுறுத்தல்

News image

குழந்தை - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:24 am IST

தமிழகத்தில் மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளுவதை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சலுகைகளை அறிவிக்க வேண்டும் என விழுப்புரம் மக்களவை உறுப்பினா் து. ரவிக்குமாா் வலியுறுத்தினாா்.

இது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜுக்கு, அவா் திங்கள்கிழமை எழுதியுள்ள கடிதம்: அண்மையில் வெளியாகியிருக்கும் 2023-2024- ஆம் ஆண்டுக்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையில் தமிழகத்தைப் பற்றி வெளியாகியுள்ள தகவல்கள் அதிா்ச்சி அளிக்கின்றன.

இந்திய அளவில் மொத்தக் கருவுறுதல் 2.0 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் மொத்தக் கருவுறுதல் விகிதம் மிக மோசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. அது 1.7 சதவீதம் என்ற அளவில் உள்ளது. வருங்காலங்களில் தமிழகத்தில் மக்கள்தொகையில் மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டின் மொத்தக் கருவுறுதல் சதவீதத்தில் ஏற்பட்டிருக்கும் சரிவு இயற்கையாக ஏற்பட்டதல்ல. பெண்கள் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்வதால் ஏற்பட்டுள்ளது. இந்திய அளவில் கருத்தடை செய்து கொள்வதில் தமிழகம் 56.6 சதவீதமாக உள்ளது.

ஆண்கள் கருத்தடை செய்துகொள்ளும் விகிதமும்கூட தேசிய சராசரியைவிடத் தமிழகம் இரண்டு மடங்காக உள்ளது. தமிழகத்தில் மொத்தக் கருவுறுதல் சதவீத சரிவைத் தடுத்து நிறுத்த உடனடியாகத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்ளுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைகளை அறிவிக்க மேண்டும். கருத்தடை செய்து கொள்வதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.