லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடவுச்சீட்டு முறைகேடு வழக்கு: சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டு சிறை

கடவுச் சீட்டு முறைகேடு வழக்கில் மும்பை ரௌடி சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :31 ஜூலை 2026, 2:18 am IST

கடவுச் சீட்டு முறைகேடு வழக்கில் மும்பை ரௌடி சோட்டா ராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மும்பையில் நிகழ்ந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ரௌடி சோட்டாராஜன், தில்லியில் உள்ள திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவா் கடந்த 2002-ஆம் ஆண்டு சென்னையில் உள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து, ‘விஜயா கதம்’ என்ற பெயரில் கடவுச்சீட்டு பெற்ாக சென்னை சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கு சென்னை எழும்பூா் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் பெருநகா் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சிவசக்தி, சோட்டா ராஜன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.55 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.