லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்

தமிழ்நாட்டுக்கு அடுத்த 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

cauvery water

ஒகேனக்கல் காவிரியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர். - Din

Published On :30 ஜூலை 2026, 5:46 pm IST

காவிரியில் தமிழகத்துக்கு நாள் ஒன்றுக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கர்நாடக அரசு தண்ணீர் திறப்பதில் முட்டுக்கட்டை போட்டுவந்த நிலையில் தில்லியில் இன்று கூடிய காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. இது இந்த மாதத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டம்.

தில்லியில் இன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கன அடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேக்கே தாட்டு பகுதியில் கர்நாடகம் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று தமிழகம் வலியுறுத்தி வரும் நிலையில் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அரசு அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர்.

தமிழக அரசின் சார்பில் கூட்டத்தில் பங்கேற்ற நீர்வளத் துறை முதன்மைச் செயலர் சத்யப்ரதா சாஹூ, காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் ஆர். சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள், தமிழ்நாட்டுக்கு உரிய நீர்ப் பங்கை வழங்குமாறு வலியுறுத்தியிருந்தனர்.

தில்லி பிகாஜி காமா பிளேஸில் உள்ள எம்டிஎன்எல் கட்டடத்தின் மேல் தரைத்தளத்தில் உள்ள அந்த ஆணையத்தின் குழு அறையில் இணையவழி மற்றும் நேரடி பங்கேற்பு முறையில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (சிடபிள்யுஎம்ஏ ) 53-ஆவது கூட்டம் கடந்த 22-ஆம் தேதி தில்லியில் நடைபெற்றிருந்த நிலையில், ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக இன்றும் கூட்டம் நடைபெற்றது.

முந்தைய கூட்டத்தில் நடந்தது என்ன?

முந்தை கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறை முதன்மைச் செயலர், 01.06.2026 முதல் 19.07.2026 வரை பில்லிகுண்டுலுவில் பெறப்பட்ட நீர்வரத்து 3.442 டிஎம்சி மட்டுமே என்றும், உச்சநீதிமன்றத்தின் 16.02.2018 இறுதித் தீர்ப்பின்படி வழங்கப்பட வேண்டிய 28.337 டிஎம்சி நீருடன் ஒப்பிடுகையில் இது 12.15 சதவீதம் மட்டுமே என்றும் கூறினார். இதனால் 24,896 டிஎம்சி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

எனவே, இதுவரை ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை உடனடியாக ஈடுசெய்யவும், மேலும் 16.02.2018 அன்று வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி விகிதாசார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் திறந்துவிடுமாறும் ஆணையம் உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

ஆனால், கர்நாடக மாநில உறுப்பினர், குறைவான மழைப்பொழிவு மற்றும் வறட்சியை காரணமாக காட்டி, குறிப்பாக பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்காக நீர் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.

நீண்ட நேர விவாதத்துக்குப் பிறகு, மழைப்பொழிவு மற்றும் நீர்வரத்தை மேலும் ஒரு வார காலம் கண்காணிக்கவும், அதன் பின்னர் மாநிலங்கள் முன்வைக்கும் கருத்துகள் மற்றும் நீரியல், வானிலை சார்ந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஜூலை 28-இல் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூடி மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய விகிதாசார நீர்ப் பங்கு குறித்து தீர்மானிக்க ஆணையம் முடிவு செய்து கூட்டத்தை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்திருந்தது.

இதையடுத்தே, செவ்வாய்க்கிழமை கூடிய காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு 3,500 கனஅடி வீதம் 15 நாள்களுக்கு 4 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த நிலையில், இன்று கூடிய ஆணையத்தின் கூட்டத்தில் தமிழகத்துக்கு அடுத்த 15 நாள்களுக்கு 4 டிஎம்சி நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

4 TMC of water released to TN Cauvery Management Authority

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.