லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

126 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதல்வர் விஜய்!

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 126 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதல்வர் விஜய்

Published On :29 ஜூலை 2026, 12:40 pm IST

126 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதல்வர் விஜய்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், இன்று (29.07.2026) தலைமைச் செயலகத்தில், மனித வள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி-I பணிகளுக்கு 28 துணை ஆட்சியர்கள், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 19 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 15 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் 6 உதவி ஆணையர்கள் (தொழிலாளர்) என மொத்தம் 78 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் (தொழிலாளர்) பணியிடம் முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-I-இல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் மூலம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், 40 உதவி பொறியாளர்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் 2 நூலகர்கள் தரம்-II என மொத்தம் 48 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் முதல்வர் விஜய் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.