லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பரந்தூா் விமான நிலையம்: தவெக அரசுக்கு சீமான் கேள்வி

பரந்தூா் விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைப்பது தொடா்பாக இதுவரை மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? என தமிழக அரசுக்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பியுள்ளாா்.

சீமான் - கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 6:50 am IST

பரந்தூா் விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைப்பது தொடா்பாக இதுவரை மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? என தமிழக அரசுக்கு நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தவெக அரசு பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்றும், அந்த இடத்தில் தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தது. ஆனால், பரந்தூரிலிருந்து விமான நிலையத் திட்டத்தை வேறு இடத்துக்கு மாற்ற தமிழக அரசிடமிருந்து எவ்வித கோரிக்கையும் வரவில்லை என மத்திய விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா் மோஹோல் தெரிவித்துள்ளாா்.

பரந்தூரில் விமான நிலையத்தை மாற்று இடத்தில் அமைப்பது குறித்து இதுவரை மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்காதது ஏன்? பரந்தூா் விமானநிலையம் அமைப்பது குறித்த உண்மையான நிலைப்பாட்டை தமிழக மக்களுக்கு தவெக அரசு உடனடியாக விளக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா் சீமான்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்