லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்

இளைஞர்கள் போராட்டம் வெற்றி பெற்றதற்கு தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

MK Stalin

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 7:50 pm IST

சிஜேபி தலைமையிலான இளைஞர்கள் போராட்டம் வெற்றி பெற்றதற்கு தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யவேண்டும் என சிஜேபி கட்சி தலைமையில் தில்லியில் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடித்தத்தை அவர் இன்று பிரதமர் மோடிக்கு அனுப்பினார்.

இளைஞர்கள் போராட்டத்தால் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ததற்கு அரசியல் கட்சிகள் முதல் பிரபலங்கள் வரை பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய விவசாயிகள் முதலில் இதனைச் செய்து காட்டினார்கள். இன்று இளைஞர்கள் இதைச் செய்துள்ளனர்.

நாடு முழுவதும் நேரடியாகவும், இணைய வழியாகவும் போராடி இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்திய இந்திய இளைஞர்களுக்கு வாழ்த்துகள். வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதைப் போலவே, நீட் தேர்வும் ரத்து செய்யப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.