லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு

அமமுக பேரவைத் தலைவரிடம் மனு அளித்திருப்பது பற்றி...

TTV Dinakaran | Kamaraj

டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ காமராஜ். - X

Published On :24 ஜூலை 2026, 4:49 pm IST

மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி, அக்கட்சி பேரவைத் தலைவரிடம் மனு அளித்துள்ளது.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் காமராஜ். இவர் பேரவையில் அண்மையில் நடைபெற்ற நம்பிக்கை தீர்மானத்தின்போது தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தார்.

இதனால் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக கூறி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவரை நீக்கி அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் நடவடிக்கை எடுத்தார்.

இந்த நிலையில் பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகரை நேரில் சந்தித்து அமமுக பொருளாளர் கரிகாலன் வெள்ளிக்கிழமை மனு ஒன்றை வழங்கியுள்ளார்.

அந்த மனுவில், கட்சித் தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்எல்ஏ பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.