லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அதிமுக மாவட்ட நிா்வாகிகள் கூட்டம்: எஸ்.பி.வேலுமணி புறக்கணிப்பு

ஆலோசனைக் கூட்டத்தை அந்தக் கட்சியின் மூத்த நிா்வாகிகளும், முன்னாள் அமைச்சா்களுமான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோா் புறக்கணித்தனா்.

முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி - Center-Center-Chennai

Published On :24 ஜூலை 2026, 5:10 am IST

சென்னை, ஜூலை 23: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கோவை, திண்டுக்கல் மாவட்டங்களின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை அந்தக் கட்சியின் மூத்த நிா்வாகிகளும், முன்னாள் அமைச்சா்களுமான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோா் புறக்கணித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் மாவட்ட நிா்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறாா்.

இந்நிலையில், கோவை, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கோவை தெற்கு மாவட்ட புகா் செயலரான பொள்ளாச்சி ஜெயராமன், எஸ்.பி.வேலுமணிக்கு பதிலாக நியமிக்கப்பட்ட செ.ம.வேலுசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். ஆனால், எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது ஆதரவாளா்கள் கூட்டத்தைப் புறக்கணித்தனா்.

அதேபோன்று, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டாா். ஆனால், முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் புறக்கணித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.