லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சின்னமனூரில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்!

சின்னமனூரில் நடைபெற்ற பூட்டுப்போடும் போராட்டம் தொடர்பாக..

Protest

போராட்டம்

Published On :20 ஜூலை 2026, 3:25 pm IST

சின்னமனூரில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பூட்டுப்போடும் போராட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் நகராட்சி பகுதியில் 19 ஆவது வார்டில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடை இதைச் சுற்றி அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் இரண்டு தனியார் பள்ளிகள் மற்றும் கோகுலம் காலனி மின்னகர் என நூற்றுக்கணக்கான குடியிருப்புகளும் உள்ளன இந்த டாஸ்மாக் கடையால பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்த கடை இடமாற்ற கோரி கடந்த மாதம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் கடையை மாற்றி அமைக்க என் மீது முயற்சி மேற்கொள்ளவில்லை. இதனை அடுத்து இன்று டாஸ்மாக் கடைக்குப் பூட்டு போடும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடை முன்பாக குவிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மகேஷ், போடி காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் தலைமையில் 40 மேற்பட்ட போலீஸார் டாஸ்மார்க் கடையைப் பூட்டு போடுவதற்காக ஊர்வலமாக வந்தவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

அதைத்தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சம்பந்தப்பட்ட கடை 3 முதல் 6 மாதத்திற்குள் வேறு இடத்துக்கு மாற்றி அமைக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பூட்டுப்போடும் போராட்டத்தைக் கைவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.