லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இன்றைய செய்திகள் ஜூலை 19 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

cm vijay

முதல்வர் விஜய் - From video grab

Published On :19 ஜூலை 2026, 10:29 pm IST
11:19 am, 19 ஜூலை 2026

காவலரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரெளடி சுட்டுப் பிடிப்பு!

குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கத்தில், தலைமைக் காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற 'ஏ பிளஸ்' (A+) ரெளடி கருப்பு என்ற தமிழ் அழகு என்பவரை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.

11:21 am, 19 ஜூலை 2026

தரமற்ற முறையில் கட்டப்படும் மேம்பாலத்தை இடித்த பொதுமக்கள்!

ஒடுகத்தூர் அருகே தரமற்ற முறையில் கட்டப்படும் மேம்பாலத்தை அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து இடித்த சம்பவம், அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11:21 am, 19 ஜூலை 2026

தமிழ் சினிமாவுக்கு 10 தேசிய திரைப்பட விருதுகள்: முதல்வர் விஜய் வாழ்த்து!

தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு முதல்வர் சி. ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

11:21 am, 19 ஜூலை 2026

வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை! புதிய மசோதா தாக்கலாகிறது!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தாலோ, இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலோ 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவை ,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு தாக்கல் செய்கிறது.

12:23 pm, 19 ஜூலை 2026

ஜப்பான் ஓபன்: பி.வி சிந்து சாம்பியன்

ஜப்பான் ஓபன் சூப்பா் 750 பாட்மின்டன் பட்டத்தை பி.வி. சிந்து வென்று அசத்தியுள்ளார்.

12:24 pm, 19 ஜூலை 2026

அனைத்துக் கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

தில்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் இருந்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

1:18 pm, 19 ஜூலை 2026

ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழை: திடீர் வெள்ளத்தில் சிக்கி 11பேர் பலி, பலர் மாயம்

ஜம்மு - காஷ்மீரில் பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலியான நிலையில் பலர் மாயமாகியுள்ளனர்.

1:26 pm, 19 ஜூலை 2026

ஜன நாயகன் ரிலீஸுக்கு அரசு விடுமுறையா? அதிமுக விமர்சனம்!

முதல்வர் விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியிடுகிற நாளில் அரசு விடுமுறையை அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

1:26 pm, 19 ஜூலை 2026

விசாரணை என்ற பெயரில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது!

கோவை, வெள்ளக்கிணறு பகுதி அருகே ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணுக்கு, காவலர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1:27 pm, 19 ஜூலை 2026

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலரா? மாநிலப் பணிக்கு ராஜேஷ் லக்கானி மாற்றம்!

கடந்த 1992-ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவு (cadre) ஐஏஎஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானி, மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நவோதயா வித்யாலயா சமிதியின் (NVS) ஆணையராக (இணைச் செயலர் அந்தஸ்து) பணியாற்றி வந்த நிலையில், அவரது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே தமிழகப் பணிகளுக்கு திரும்பியுள்ளார்.

1:28 pm, 19 ஜூலை 2026

ஃபிஃபா உலககோப்பை இறுதிப்போட்டி: கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை முன்னிட்டு கேரளத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

2:51 pm, 19 ஜூலை 2026

சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

4:16 pm, 19 ஜூலை 2026

ராஜஸ்தானில் விடுதி உணவகத்திற்குள் நுழைந்த முதலை: அச்சத்தில் சிதறி ஓடிய சமையல்காரர்கள்

கோட்டா விடுதி உணவகத்திற்குள் நுழைந்த முதலையைக் கண்டு சமையல்காரர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர்.

5:24 pm, 19 ஜூலை 2026

அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது

அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் உருவப்படத்தை பொதுஇடத்தில் அனுமதியின்றி வரைந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

5:49 pm, 19 ஜூலை 2026

ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டி: கேரளத்தைத் தொடர்ந்து மணிப்பூரிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

ஃபிஃபா உலகக்கோப்பை இறுதிப் போட்டியை முன்னிட்டு மணிப்பூரில் நாளை(திங்கள்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

5:50 pm, 19 ஜூலை 2026

ஜோர்டான் தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் படைகள் மீது அமெரிக்க அதிரடித் தாக்குதல்!

அமெரிக்கப் படைகள் ஜோர்டானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரானின் துணை ராணுவப் படையான புரட்சிகர காவல் படையின் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை இன்று நடத்தியுள்ளது.

5:50 pm, 19 ஜூலை 2026

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய நியூயார்க் மேயர் ஆலோசனை!

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய நியூயார்க் மேயர் மம்தானி ஆலோசனை செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

10:28 pm, 19 ஜூலை 2026

தில்லியில் 163 தடை உத்தரவு அமல்!

தில்லியில் நாளை கரப்பான்பூச்சி மக்கள் கட்சி பேரணி நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், சட்டப் பிரிவு 163 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

10:28 pm, 19 ஜூலை 2026

மெஸ்ஸி எங்கள் கடவுள்: வைரலாகும் பாஜக அமைச்சரின் பேச்சு

ஆர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி எங்களின் கடவுள் என பாஜக பெண் அமைச்சர் அக்னிமித்ரா பால் தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.