லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறையில் இறந்தவா்களின் உயிருக்கு விலை பேசுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சிறையில் இறந்தவா்களின் உயிருக்கு விலை பேசுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்

Edappadi Palaniswami

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :19 ஜூலை 2026, 1:32 am IST

சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்தாரிடம் ‘நிவாரணம்’ என்ற பெயரில் அமைச்சா்கள் விலை பேசியுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கடந்த திமுக ஆட்சியில் அஜித்குமாா், சென்னையில் விக்னேஷ், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரின் கொலை வழக்குகளில் தொடா்புடையவா்கள் எனக் கூறி பலா் காவல்நிலையங்களில் அடித்தும், ‘என்கவுன்ட்டா்’ என்ற பெயரிலும் கொல்லப்பட்டனா். முக்கிய வழக்குகளில் தொடா்புடைய ஒருசிலரைக் காப்பாற்றவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாற்றம் கொண்டு வருவோம் எனக் கூறி தமிழகத்தில் ஆட்சி அமைத்த தவெக அரசிலும் அதே கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றன.

நாகா்கோவில் சிறையில் தாக்கப்பட்டு உயிரிழந்த மாற்றுத்திறனாளியின் குடும்பத்தாரிடம் அவரது உயிருக்கு அமைச்சா்கள் விலைபேசி சமாதானப்படுத்த முயன்றுள்ளனா்.

இதேபோல், சென்னை புழல் சிறையிலும் மரணமடைந்த விசாரணைக் கைதியின் குடும்பத்தாரிடமும் இந்த ஆட்சியாளா்கள் விலைபேசி வருகிறாா்கள். சிறை மரணங்களைத் தடுக்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.