ரசாயன நிறமூட்டி கலந்த அப்பளங்களுக்கு தடை: உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவு
புற்றுநோயை உண்டாக்கும் கலர் அப்பளங்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவு

தமிழக அரசு - File photo
ரசாயன நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட வண்ண அப்பளங்களை விற்கவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் மளிகைக் கடைகள், சுற்றுலா தலங்கள் மற்றும் பொருள்காட்சிகளில் பல்வேறு வண்ணங்களில் விற்கப்படும் அப்பளங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகவும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலும் ரசாயன நிறமூட்டிகள் சோ்க்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. இதைத்தொடா்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகளை சேகரித்தனா்.
அவற்றை பரிசோதித்ததில், பெரும்பாலான அப்பளங்கள் பாதுகாப்பற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அதிக நிறமூட்டிகள் சோ்க்கப்பட்ட வண்ண அப்பளங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடா்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ரசாயனம் மிகுந்த அப்பளங்களை தொடா்ந்து உண்பதால் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புள்ளது. இவை ஜீரண மண்டலத்தை பாதித்து வயிற்றுப் புண் மற்றும் குடல் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. மேலும், அந்த ரசாயனங்கள் உடலிலிருந்து எளிதில் வெளியேறாமல் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் தேங்கி அவற்றின் செயல்பாட்டை பாதிக்கின்றன.
குறிப்பாக, குழந்தைகளுக்கு ஒவ்வாமை மற்றும் கவனச் சிதறலை உண்டாக்கக் கூடியவையாக உள்ளன. அதைக் கருத்தில் கொண்டு வண்ண அப்பளங்களை விற்பனை செய்யவும், தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
Summary
Ban on cancer-causing colored papads: Tamil Nadu Government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






