லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நியாய விலைக் கடைகளில் ரசீது கட்டாயம் பெற வேண்டும்: பொதுமக்களுக்கு அமைச்சா் அறிவுரை

நியாய விலைக் கடைகளில் பொருள்களை பொதுமக்கள் வாங்கும் போது கட்டாயம் ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் அறிவுறுத்தினாா்.

நியாய விலைக் கடை - கோப்புப்படம்.

Published On :16 ஜூலை 2026, 12:51 am IST

நியாய விலைக் கடைகளில் பொருள்களை பொதுமக்கள் வாங்கும் போது கட்டாயம் ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சா் ப.வெங்கடரமணன் அறிவுறுத்தினாா்.

சென்னை கொடுங்கையூரில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சா் ப.வெங்கடரமணன் பங்கேற்று பெரம்பூா் பகுதிக்குட்பட்ட 300 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது: விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலை மற்றும் தனியாா் அரிசி அரைவை ஆலையிலிருந்து அரிசியாக பெறப்படுகிறது. சா்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வியாபாரிகளிடமிருந்து வெளிச்சந்தை விலையில் பெறப்பட்டு, தரப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, விலையில்லா மற்றும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன.

நியாய விலைக் கடைகளில் பொருள்களை வாங்கும் ஒவ்வொரு முறையும் கட்டாயமாக ரசீதை பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள் வெளிச்சந்தைக்கு முறைகேடாக விற்கப்படுவதை தடுக்க முடியும் என்றாா் அவா்.

அதையடுத்து, ஆா்.கே.நகா், ராயபுரம் மற்றும் திருவொற்றியூா் பகுதிகளுக்குட்பட்ட 308 பயனாளிகளுக்கும் புதிய மின்னணு குடும்ப அட்டைகளை அமைச்சா் வழங்கினாா். சென்னை வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 608 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.