லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் தேனி இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?

கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் உள்ள இரட்டையர்களின் ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி என்பது பற்றி..

ஆதார் அட்டை

ஆதார் அட்டை - file photo

Published On :14 ஜூலை 2026, 2:45 pm IST

தேனி மாவட்டம், அல்லி நகரத்தைச் சேர்ந்த இரட்டையர்களாக ரேவதி - ரேணுகா என்ற பத்தாம் வகுப்பு மாணவிகள் இருவரும் கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இருப்பதால், ஆதார் புதுப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இருவரும் பள்ளியில் பத்தாம் வகுப்புப் பயின்று வரும் நிலையில், பொதுத் தேர்வெழுதுவதற்காக, ஆதார் அட்டையை புதுப்பிக்க வந்துள்ளனர்.

ஆனால், ஆதார் மையத்தில், அவர்களது கைரேகை மற்றும் கருவிழிகள் ஒன்றுபோல இருப்பதால் அவற்றை புதுப்பிக்க முடியவில்லை. இந்த நிலையில், இருவரும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

எனினும், இதுபோன்று அடையாள ஒற்றுமையுடன் இரட்டையர்கள் இருக்கும் போது மதுரையில் செயல்படும் ஆதார் மையத்தில் மட்டுமே இவர்களது கைரேகை மற்றும் கருவிழிகளை பதிவு செய்யும் வசதி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அங்கும் இவர்களது ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க முடியாமல் போனதாகக் கூறப்படுகிறது.

எனவே, இவர்கள் பெங்களூரில் உள்ள ஆதார் தலைமையகத்துக்குத்தான் நேரில் செல்ல வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால், தங்களது குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், பெங்களூர் சென்று ஆதார் பதிவுகளை அப்டேட் செய்வது என்பது இயலாது என்பதால் அரசிடம் உதவி கேட்டிருக்கிறார்கள்.

மேலும், ஆதார் அட்டை அப்டேட் செய்யப்படாததால், உதவித் தொகையும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.