லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!

சென்னை ஐஐடியில் ஒன்றாகப் படித்து பட்டம் பெற்ற தாய்- மகன் ஆச்சரியத்தை அளித்துள்ளனர்.

ஐஐடி சென்னை

Published On :14 ஜூலை 2026, 2:48 pm IST

சென்னை ஐஐடி வழங்கும் ஆன்லைன் டேட்டா சயின்ஸ் பாடத்தில் ஒன்றாக சேர்ந்து படித்து தாயும் மகனும் ஒன்றாகவே பட்டமும் பெற்றுள்ளைதை பலரும் வியப்புடன் பார்க்கிறார்கள்.

ஜிகிஷா டெய்லர் (45) மகன் ஆதித்யா கபாடியா (21) இருவரும் ஒன்றாக பட்டம் பெற்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஜிகிஷா, குஜராத் மாநிலம் பரூச் பகுதியில் இயங்கி வரும் பொறியியல் கல்லூரியில் 16 ஆண்டுகளாக பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு, மகன் கபாடியா ஐஐடி சென்னையில் ஆன்லைன் மூலம் பிஎஸ் டேட்டா சயின்ஸ் படிப்பில் சேர்ந்தார். எந்தக் கல்லூரியாக இருந்தாலும் கரோனா காலம் என்பதால் ஆன்லைன் மூலம்தான் படிக்க வேண்டும்.

மேலும், இதனை நான்கு ஆண்டு காலம் கல்லூரியில் பயிலும் படிப்பாகவே சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மகள் ஜிகிஷாவும் இதில் இணைந்துள்ளார். நீண்ட காலம் கழித்து, புதிய பாடங்களை பயில்வது சற்று கடினமாக இருந்தாலும், மகனுடன் போதிய நேரம் ஒதுக்கி படித்திருக்கிறார்.

சக மாணவர்களும் ஒரு குழுவாக அமைத்துக்கொண்டு படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். கும்பத்தினரும் கொடுத்த ஊக்கத்தோடு படித்துமுடித்து தற்போது மகனுடன் சேர்ந்து பட்டம் பெற்றிருக்கிறார்.

தாய், உந்துதலோடு படிப்பதைப் பார்த்து ஆதித்யாவுக்கும் பெரும் ஊக்கம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஒன்றாக நேரத்தை செலவிட ஆரம்பித்தோம். இது எங்களுக்கு மிகவும் நன்றாக அமைந்திருந்தது.

எனவே படிக்கவும் புதிய கலைகளை கற்கவும் வயது ஒன்றும் தடையில்லை என்பதை தாய் ஜிகிஷா நிரூபித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.