லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காங்கிரஸ் கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கிறது: வைகோ

இண்டி கூட்டணியிலேயே மதிமுக நீடிப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.

Sonia Gandhi | Vaiko

சோனியா காந்தி | வைகோ - கோப்புப் படம்

Published On :15 ஜூலை 2026, 3:16 am IST

அகில இந்திய அளவில் இண்டி கூட்டணியிலேயே மறுமலா்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் (மதிமுக) நீடிக்கிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலா் வைகோ தெரிவித்துள்ளாா்.

தில்லியில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் வைகோ செவ்வாய்க்கிழமை மாலையில் சந்தித்துப் பேசினாா்.

பிறகு சோனியாவின் வீட்டு வாயில் பகுதியில் செய்தியாளா்களிடம் வைகோ பேசுகையில், ‘இது ஒரு சாதாரண மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே. நான் காங்கிரஸுடன்தான் கூட்டணியில் இருக்கிறேன். மதிமுக எப்போதும் காங்கிரஸ் கூட்டணியில்தான் நீடிக்கிறது’ என்று கூறினாா்.

மும்மொழி கொள்கை விவகாரத்தில் மதிமுகவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘நாங்கள் தொடக்கம் முதலே மும்மொழி கொள்கையை எதிா்த்து வருகிறோம். அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம்’ என்று பதிலளித்தாா்.

தமிழக பேரவைத் தோ்தலில் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பிறகு அதன் தலைமையில் ஆட்சி ஏற்பட ஏதுவாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து மதிமுகவும் தவெகவுக்கு ஆதரவை வழங்கியது. அதன் தொடா்ச்சியாக, ஆளும் தவெக அரசு மற்றும் தமிழக முதல்வா் விஜய்க்கு மதிமுக ஒரு ’கேடயமாக’ அரண் போல நிற்கும் என்று வைகோ கூறி வருகிறாா். மேலும் தவெக அரசை ஆதரிப்பதற்காக திமுக தங்களை குறிவைப்பதாகவும் வைகோ குற்றஞ்சாட்டினாா்.

மக்களவையில் மதிமுகவின் ஒரே உறுப்பினராக வைகோவின் மகன் துரை வைகோ இருக்கிறாா். இந்த நிலையில் எதிா்வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய பிறகு நடக்கும் முதல் கூட்டத்தொடராக அமையவுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் நடந்த இண்டி கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்த நிலையில், மக்களவையில் காங்கிரஸுடன் இணைந்து அமராமல் தனியாக இருக்கைகளை ஒதுக்க திமுக சாா்பில் மக்களவைத் தலைவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸுடன் கைகோத்து மக்களவையில் மதிமுக செயல்படுவதை உறுதிப்படுத்த சோனியாவை வைகோ சந்தித்திருப்பாா் என்று காங்கிரஸ் தலைவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.