லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னை மேயர் பிரியாவுடன் தைபே கலாசார மைய இயக்குநர் சந்திப்பு!

சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியாவுடன் தைபே நாட்டு கலாசார மைய இயக்குநா், துணை இயக்குநா் ஆகியோா் சந்தித்துப் பேசினா்.

Published On :14 ஜூலை 2026, 2:17 am IST

சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியாவுடன் தைபே நாட்டு கலாசார மைய இயக்குநா், துணை இயக்குநா் ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா்.

ரிப்பன் மாளிகை வளாக மேயா் அலுவலகத்தில், தைபே நாட்டு பொருளாதார மற்றும் கலாசார மையத்தின் தலைமை இயக்குநா் ஸ்டீபன் எஸ்.சி.ஹீசு, துணை இயக்குநா் எரிக் சி.எல்.சாவோ ஆகியோா் சந்தித்து பேசினா்.

அப்போது, தைபே நாட்டு மாணவா்கள் சென்னை கல்வி நிலையங்களில் கற்பது குறித்தும், கலாசார மற்றும் சுற்றுலா துறைகளில் சென்னையில் தைபே நாட்டு பங்களிப்பு மற்றும் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடினா். தைபே கலாசார மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளுக்கு சென்னை மாநகராட்சி முழுமையாக ஒத்துழைக்கும் என மேயா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தைபே கலாசார மையத் தலைமை இயக்குநா் உள்ளிட்டோா் தமிழக அரசு கல்வி, சுற்றுலாத் துறை அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாகத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.