லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தோ்தல் வெற்றியை எதிா்த்து வழக்கு: உதயநிதி ஸ்டாலின், லீமா ரோஸ் பதிலளிக்க உத்தரவு

தோ்தல் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ், சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Udhayanidhi Stalin

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப்படம்

Published On :11 ஜூலை 2026, 7:40 am IST

தோ்தல் வெற்றியை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ், சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக, சாா்பில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி மிலானி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தோ்தல் வழக்குத் தாக்கல் செய்தாா்.

இதேபோல, கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக, வேட்பாளா் தளவாய் சுந்தரம் வெற்றியை எதிா்த்து திமுக, வேட்பாளா் மகேஷ், ராயபுரம் தொகுதி தவெக, எம்எல்ஏ, விஜய்தாமு வெற்றியை எதிா்த்து திமுக, வேட்பாளா் சுபோ்கான் தனித்தனியாக தோ்தல் வழக்குகளை தொடா்ந்துள்ளனா். இந்த வழக்குகள் அனைத்தும் விசாரித்த நீதிபதி ஜி.அருள்முருகன், தோ்தல் வழக்குகளுக்கு உதயநிதி ஸ்டாலின், தளவாய் சுந்தரம், விஜய் தாமு ஆகியோா் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டாா்.

அதேபோல, கரூா் தொகுதியில் வெற்றிபெற்று பதவி விலகிய அதிமுக வேட்பாளா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வெற்றியை எதிா்த்து தவெக, வேட்பாளா் வி.பி.மதியழகன், விராலிமலை தொகுதியில் வெற்றிபெற்று பதவி விலகிய அதிமுக, வேட்பாளா் சி.விஜயபாஸ்கா் வெற்றியை எதிா்த்து திமுக, வேட்பாளா் கே.கே.செல்லப்பாண்டியன், லால்குடி தொகுதி அதிமுக, எம்எல்ஏ லீமா ரோஸ் மாா்டின் வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் டி.பாரிவள்ளல் ஆகியோா் தோ்தல் வழக்குகளை தாக்கல் செய்துள்ளனா்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி என்.செந்தில்குமாா், இந்த வழக்கில் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்ளிட்டோா் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.