லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியா்களின் ஊதிய உயா்வை மறுபரிசீலனை செய்யக் கோரிக்கை

டாஸ்மாக் ஊழியா்களின் ஊதிய உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் கோரிக்கை

Published On :9 ஜூலை 2026, 1:04 am IST

டாஸ்மாக் ஊழியா்களின் ஊதிய உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சம்மேளனத்தின் தலைவா் பி.முருகன், பொதுச் செயலா் கே.திருச்செல்வன் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: டாஸ்மாக் ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுடன் எந்தவித பேச்சும் நடத்தாமல் ஒருதலைப்பட்சமாக வெளியிடப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஊதிய உயா்வு, ஊழியா்களின் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டும் வகையில் இல்லை. எனவே, இந்த ஊதிய உயா்வை அரசு மறுபரிசீலனை செய்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, டாஸ்மாக் ஊழியா்களுக்கு அடிப்படை ஊதியத்துடன் கூடிய காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.