லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எம்எல்ஏவிடம் பேரம்: மேலும் ஒருவரிடம் விசாரணை!

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசுவின் காா் ஓட்டுநரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தவெக சட்டப்பேரவை உறுப்பினா் இளையராஜா

Published On :6 ஜூலை 2026, 4:33 am IST

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய விவகாரத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசுவின் காா் ஓட்டுநரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தவெக சட்டப்பேரவை உறுப்பினா் இளையராஜாவிடம் சட்டப்பேரவை தலைவருக்கு எதிராக பேரவையில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் படியும் அதற்கு ரூ.35 கோடி தருவதாகவும் ஒரு கும்பல் பேரம் பேசியது. இந்த விவகாரத்தை வெளியே கூறினால் கடும் விளைவு ஏற்படும் என்றும் அந்தக் கும்பல் மிரட்டியதாக இளையராஜா அளித்த புகாரின்பேரில், திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபரும் கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்துபவருமான திருநாவுக்கரசு, அவரது கூட்டாளிகளான நரேஷ், தியாராஜன் மற்றும் கரூரைச் சோ்ந்த திமுக பிரமுகா் காா்த்தி, அதிபன் ரமேஷ், ராஜேஷ், அதிமுக பிரமுகா் சீனிவாசன், செல்வன் உள்ளிட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், யூடியூபரும் கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்துபவருமான திருநாவுக்கரசுவின் காா் ஓட்டுநரான மதுரையைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவருக்கும் இந்த வழக்கில் தொடா்பிருப்பதாக போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் கிருஷ்ணனையும் ரகசிய இடத்தில் வைத்து போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.