லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குட்கா கறைகளை நீக்கும் வாஷிங்மெஷின்! தவெகவை விமர்சித்த கனிமொழி!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெகவில் இணைவதை கனிமொழி விமர்சித்திருப்பது பற்றி...

Vijay | Kanimozhi

முதல்வர் விஜய் | திமுக எம்.பி. கனிமொழி - கோப்புப் படம்

Published On :2 ஜூலை 2026, 10:51 am IST

வடக்கில் பாஜக பயன்படுத்தும் வாஷிங்மிஷன் ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்துவிட்டது என்று தவெகவை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகிய இருவரும் தங்களின் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்துள்ள நிலையில், இன்று முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலையில் தவெகவில் இணையவுள்ளனர்.

இந்த நிலையில், தவெகவை விமர்சித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டிருக்கும் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“வடக்கில் பாஜக பயன்படுத்தி வந்ததைப் போன்ற 'வாஷிங்மெஷின்' ஒன்று, தற்போது தமிழ்நாட்டிற்கும் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். இந்த புது தமிழ்நாடு மாடல் மெஷின் குட்கா கறைகளைக் கூட நீக்கும் என்று சொல்கிறார்களே... உண்மையா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகா்களுக்கும் லஞ்சம் கொடுத்து தடையை மீறி சட்டவிரோதமாக குட்கா விற்கப்பட்டது தொடா்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் பெயரும் உள்ளது.

இதுதொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அவர் தவெகவின் இணைவதை கனிமொழி விமர்சித்துள்ளார்.

Summary

A washing machine to remove Gutkha stains - Kanimozhi criticizes TVK

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.