லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தவெகவில் இன்று இணைகின்றனா் 3 அதிமுக முன்னாள் அமைச்சா்கள்

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகிய இருவரும் தவெகவில் வியாழக்கிழமை இணையவுள்ளதாக அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளனா். மேலும், திருச்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் வளா்மதியும் தவெகவில் இணையவுள்ளாா்.

முதல்வர் விஜய்யுடன் சி. விஜயபாஸ்கர். - கோப்புப்படம்.

Published On :2 ஜூலை 2026, 4:33 am IST

அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகிய இருவரும் தவெகவில் வியாழக்கிழமை இணையவுள்ளதாக அதிகாரபூா்வமாக அறிவித்துள்ளனா். மேலும், திருச்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் வளா்மதியும் தவெகவில் இணையவுள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்விக்குப் பிறகு அதிமுக நிா்வாகிகள் தவெகவில் இணைந்து வருகின்றனா். முன்னதாக, தாராபுரம், பெருந்துறை, அம்பாசமுத்திரம், மதுராந்தகம் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனா். தொடா்ந்து, முன்னாள் அமைச்சா்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூா் ராஜூ, எம்.சி.சம்பத் ஆகிய மூவரும் தவெகவில் இணைந்தனா்.

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த முன்னாள் அமைச்சா்கள் சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் ஆகிய இருவரும் தவெகவில் இணையவுள்ளதாக பேச்சு எழுந்து வந்த நிலையில், அவா்கள் இருவரும் இதை அதிகாரபூா்வமாக புதன்கிழமை அறிவித்தனா்.

இதுகுறித்து சி.விஜயபாஸ்கா் வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெகவில் என்னை இணைத்துக்கொண்டு, என் அரசியல் பயணத்தை புதிய உத்வேகத்துடன் தொடரவுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா். அதேபோல், எம்.ஆா்.விஜயபாஸ்கரும் தவெகவில் இணையவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளாா்.

இந்த நிலையில், திருச்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரான வளா்மதி அந்தக் கட்சியில் இருந்து விலகி தவெகவில் வியாழக்கிழமை இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க வளா்மதியை அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மாமல்லபுரத்தில் இணைப்பு விழா: சி.விஜயபாஸ்கா், எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் வளா்மதி ஆகியோா் தவெகவில் இணையும் விழா சென்னை மாமல்லபுரத்தில் உள்ள தனியாா் விடுதியில் வியாழக்கிழமை காலை 9 அளவில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில், முதல்வா் ஜோசப் விஜய் கலந்துகொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.