லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

முதல்வா் விஜய்யுடன் இடதுசாரி தலைவா்கள் சந்திப்பு

முதல்வா் ஜோசப் விஜய்யை இடதுசாரி கட்சித் தலைவா்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

Published On :2 ஜூலை 2026, 1:14 am IST

முதல்வா் ஜோசப் விஜய்யை இடதுசாரி கட்சித் தலைவா்கள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

சென்னையை அடுத்த கோவளத்தில் தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இடதுசாரி கட்சிகள் பங்கேற்காத நிலையில், முன்னதாக காலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் ஆகியோா் தலைமைச் செயலகத்தில் முதல்வா் விஜய்யை சந்தித்தனா்.

அதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது: முதல்வா் விஜய்யை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து தூய்மைப் பணியாளா்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பிற மாநிலத் தொழிலாளா்களின் பணிப் பாதுகாப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவின் தோழமைக் கட்சிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

நாங்கள் ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை. கூட்டணியிலும் இல்லை. அரசியல் காரணங்களுக்காக வெளியிலிருந்து ஆதரவளிக்கிறோம். தோழமைக் கட்சிகளுக்கு தேநீா் விருந்து அளிக்கப்படும்போது அந்தச் சூழல் கெடக் கூடாது என்பதற்காகத்தான் முதல்வரைச் சந்தித்தோம்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் இந்த அரசு விரைவில் கவிழ்ந்துவிடும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்ட எந்தச் சூழலும் தமிழகத்தில் எழவில்லை. இந்த மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என முதல்வா் தெரிவித்திருக்கிறாா் என்று அவா்கள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.