லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மிசாவைப் பார்த்த திமுகவை தோற்கடித்தவர்கள் நாங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ஆதவ் பதில்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்விக்கு ஆதவ் அர்ஜுனா பதிலளித்தது பற்றி...

Udhaynidhi stalin Aadhav Arjuna

ஆதவ் அர்ஜுனா, உதயநிதி ஸ்டாலின் - Tn assembly

Published On :21 ஆகஸ்ட் 2026, 11:04 am IST

மிசாவையே பார்த்த திமுகவை தோற்கடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றவர்கள் நாங்கள் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீதி, சிறை, சட்டம், எரிசக்தி, அறநிலையத் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகின்றது.

இதனிடையே, சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் தன்னுடைய மேசையில் 3 கோப்புகள் இருப்பதாக திமுக அரசைக் குற்றம்சாட்டும் வகையில் பேசினார். அதை அவர் பார்க்க வேண்டும். எதற்காக பயப்படுகிறீர்கள்? ஜோசியக்காரர் சொன்னதால்தான் முதல்வர் பார்ப்பாரா?" என்று கேட்டார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

"மிசாவைப் பார்த்த தனிப்பெரும் இயக்கமான திமுகவை தோற்கடித்து வெற்றி பெற்று தவெக என்றால் என்னவென்று காண்பித்துள்ளோம். எங்களுக்கு எந்த பயமும் கிடையாது. அனைத்துத் துறைகளிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். தவறுகள் மீது ஆதாரத்துடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதான் முதல்வர் அன்று சொல்ல வந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் இவர்கள் செய்யாத ரீல்ஸா? பாடாத பாடலா? நாடாளுமன்றத்தில் பெரியார், அண்ணா பெயரைக் கூறி திமுக எம்.பி.க்கள் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவில்லை. யார் பெயரைக் கூறி பதவியேற்றுக்கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

2021 தேர்தல் அறிக்கையில் சட்டப்பேரவை நேரலை செய்யப்படும் என்று சொன்னீர்களே ஏன் செய்யவில்லை?. நேரலை செய்து வெளிப்படையாக நடத்தக்கூடிய தைரியம் திமுகவுக்கு இதுவரை இருந்ததில்லை. தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக ஜனநாயகத்தை காக்க நேரலை செய்து வருகிறோம்" என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவையில் முதல்முதலில் கேள்வி நேரத்தை நேரலை செய்தது திமுகதான் என்றார்.

Summary

"We are the ones who defeated the DMK that witnessed MISA!" — Minister Aadav's reply to Udhayanidhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.