‘எம்.எல்.ஏ. காருக்கான நிதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக் கொடுங்கள்’ - சௌமியா அன்புமணி
‘எம்.எல்.ஏ. காருக்கான நிதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக் கொடுங்கள்’ என்று பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளதைப் பற்றி...
சௌமியா அன்புமணி
‘எம்.எல்.ஏ. காருக்கான நிதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக் கொடுங்கள்’ என்று பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் புதன்கிழமை அறிவித்தார். அத்துடன், கார் பராமரிப்பு படியாக ரூ. 75,000-ம், உதவியாளர் படியாக ரூ. 25,000 என மொத்தம் ஒரு உறுப்பினருக்கு ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்றார்.
சட்டப்பேரவையில் இன்று (ஆக. 21) காலை பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம் என்று அறிவித்தார். அதேபோன்று, இந்திய, மார்க்சிய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள், பாமக எம்.எல்.ஏக்களும் தங்களுக்கு கார் வேண்டாம் என்று அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் குறித்து பாமக சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசுகையில், “இலவச மின்சாரம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. விவசாயிகள் எப்படி அதனை ஈடுகட்ட போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆண்டுதோறும் மின் கட்டணம் ஏறிக்கொண்டேதான் செல்கிறது.
அப்படி என்றால் ரூ. 1 லட்சம் கோடியாவது மின்சாரத் துறைக்கு வருவாய் வந்திருக்க வேண்டும். கடந்தாண்டில் இருந்த ரூ. 10,000 கோடி கடன் அப்படியேதான் இருக்கிறதா? என்ற சந்தேகமும் இருக்கிறது.
கார் வேண்டுமா வேண்டாமா என்பது உறுப்பினர்களின் விருப்பத்தை பொறுத்தது. பாமகவில் நாங்கள் இருவரும் கார் வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். அந்த நிதியில் எங்கள் தொகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் கட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
Summary
PMK MLA Sowmya Anbumani has requested that paddy procurement centers be constructed using funds allocated for the MLA's constituency.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




