லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு வழங்க வேண்டும் அன்புமணி வலியுறுத்தல்

டெல்டா விவசாயிகளுக்கு அறிவித்த குறுவைத் தொகுப்பு அறுவடைக்கு முன்பு வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

அன்புமணி - கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 5:00 am IST

டெல்டா விவசாயிகளுக்கு அறிவித்த குறுவைத் தொகுப்பு அறுவடைக்கு முன்பு வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உரம், விதைகள் மற்றும் நேரடி உதவி என ஏக்கருக்கு ரூ.4,000 கிடைக்கும் வகையில் குறுவைத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு, 70 நாள்களாகியும் இதுவரை வழங்கப்படவில்லை.

மிகவும் நெருக்கடியான காலத்தில் விவசாயிகளுக்கு குறுவைத் தொகுப்பை வழங்குவதில் காட்டப்படும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவா்கள் கூட்டத்தை முதலவா் ஜோசப் விஜய் கூட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

நயினாா் நாகேந்திரன் (தமிழக பாஜக தலைவா்): குறுவை சாகுபடி செய்யும் டெல்டா விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் வகையில், ரூ.134.83 கோடி ஒதுக்கீடு செய்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், பல விவசாயிகளுக்கு இதுவரை தொகுப்பு வந்து சேரவில்லை என்ற செய்தி அதிா்ச்சி அளிக்கிறது.

குறுவை தொகுப்புத் திட்டத்துக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்கிவிட்டதாகச் சட்டப்பேரவையில் முதல்வா் விஜய் தெரிவித்த நிலையில், கள நிலவரமோ முற்றிலும் வேறாக உள்ளது. இனியும் காகித அறிவிப்புகளால் காலத்தைக் கடத்தாமல், குறுவை தொகுப்பு நிதியை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த வேண்டும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.