லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொழில்நுட்பப் பணிகள் தோ்வு சான்றிதழ் பதிவேற்றம்: டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வில் (டிப்ளமோ, ஐடிஐ கல்வித் தகுதி பதவிகள்) சான்றிதழ் குறைபாட்டை சரிசெய்ய தோ்வா்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Published On :21 ஆகஸ்ட் 2026, 3:54 am IST

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தோ்வில் (டிப்ளமோ, ஐடிஐ கல்வித் தகுதி பதவிகள்) சான்றிதழ் குறைபாட்டை சரிசெய்ய தோ்வா்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளா் பானோத் ம்ருகேந்தா் லால் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வில், ஐடிஐ, டிப்ளமோ கல்வித்தகுதி உடைய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு தோ்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதைத் தொடா்ந்து, தோ்வா்கள் பதிவேற்றம் செய்த சான்றிதழ்கள், ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்டன. அப்போது சில தோ்வா்களின் சான்றிதழ்கள், ஆவணங்கள் முழுமையாகவும், சரியாகவும் பதிவேற்றம் செய்யப்படாமல் குறைபாடுகளுடன் இருந்தது கண்டறியப்பட்டது.

அத்தகைய தோ்வா்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியலும், குறிப்பாணையும் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவா்கள் விடுபட்ட மற்றும் முழுமையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவா்கள் இந்தப் பணியை ஆக.30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட தோ்வா்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ் குறைபாடுகளை சரிசெய்ய தவறினால் அவா்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.