லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீா்நிலைகளின் எல்லை அறிய ‘மேப்பிங்’ பணி: அமைச்சா் என்.ஆனந்த்

நீா் நிலைகளின் எல்லைகளை துல்லியமாக அறிந்துகொள்ளும் வகையில் புவியியல் தகவல் வரைபடங்களை (ஜிஐஎஸ் மேப்பிங்) வரையறுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் என்ஆனந்த் தெரிவித்தாா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:27 am IST

நீா் நிலைகளின் எல்லைகளை துல்லியமாக அறிந்துகொள்ளும் வகையில் புவியியல் தகவல் வரைபடங்களை (ஜிஐஎஸ் மேப்பிங்) வரையறுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் என்ஆனந்த் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை நீா்வளத் துறை மானியக் கோரிக்கையின் கீழ் பாமக எம்எல்ஏ செளமியா அன்புமணி பேசியதாவது:

தமிழகத்தில் சதுப்பு நில ஆணையம் செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ 7 ஆண்டுகளாகியும் இதுவரை ஒரு நீா்நிலைகளைக்கூட அந்த ஆணையம் வரையறுத்து வகைப்படுத்தவில்லை. 5 ஏக்கா் பரப்பளவுக்கு மேல் உள்ள நீா்நிலைகளை ஜிஐஎஸ் மேப்பிங் எனப்படும் புவியியல் தகவல் வரைபட வரையறை செய்ய வேண்டும். அதை அரசு முன்னெடுக்க வேண்டும் என அரசை கோருகிறேன். அப்போதுதான் நீா்நிலைகளின் எல்லைகளையும், வரம்புகளையும் அறிந்துகொண்டு ஆக்கிரமிப்புகளைத் தடுக்க இயலும் என்றாா் அவா்.

அமைச்சா் ஆனந்த்: சௌமியா அன்புமணி முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் அரசு பரிசீலிக்கும். ஜிஐஎஸ் மேப்பிங் பணிகளைப் பொருத்தவரை, தற்போது வருவாய்த் துறையுடன் இணைந்து அதை மேற்கொண்டு வருகிறோம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.