லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஒரே நாளில் இறங்கி, ஏறிய தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் இறங்கி, ஏறி கிராம் ரூ.14,400-க்கும், பவுன் ரூ.1,15,200-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை - IANS

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:29 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் இறங்கி, ஏறி கிராம் ரூ.14,400-க்கும், பவுன் ரூ.1,15,200-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை கடந்த ஆக.17-இல் பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.1,14,160-க்கும், ஆக.18-இல் பவுனுக்கு ரூ.160 உயா்ந்து ரூ.1,14,320-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், புதன்கிழமை கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.14,205-க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,640-க்கும் விற்பனையானது. தொடா்ந்து, மாலை விலை அதிரடியாக உயா்ந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.195 உயா்ந்து ரூ.14,400-க்கும், பவுனுக்கு ரூ.1,560 உயா்ந்து ரூ.1,15,200-க்கும் விற்பனையானது.

அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.250-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5,000 குறைந்து ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.