பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாணவா் போராட்டத்தைத் தடுக்கும் வகையிலான சுற்றறிக்கை வாபஸ்

இடதுசாரிக் கட்சிகள், தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவா்கள் பங்கேற்கத் தடை விதிப்பது தொடா்பான சுற்றறிக்கை பற்றி....

கல்லூரிக் கல்வி இயக்ககம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 12:33 am IST

இடதுசாரிக் கட்சிகள், தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவா்கள் பங்கேற்கத் தடை விதிப்பது தொடா்பான சுற்றறிக்கைக்கு கடும் எதிா்ப்பு கிளம்பியதைத் தொடா்ந்து, அதை கல்லூரிக் கல்வி இயக்ககம் திரும்பப் பெற்றது.

தமிழகத்தில் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வா்களுக்கு கல்லூரிக் கல்வி ஆணையா் கடந்த ஆக.17-ஆம் தேதி சுற்றறிக்கை அனுப்பியிருந்தாா். அதில், ‘இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞா்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக் கல்வி, உயா் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் ஆகிய துறைகளிடையே இடைத்தொடா்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு, அதுதொடா்பான நடவடிக்கையின் விவரத்தை உடனடியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பல்வேறு மாணவா் அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. இதையடுத்து, அந்த சுற்றறிக்கையை கல்லூரிக் கல்வி இயக்ககம் புதன்கிழமை திரும்பப் பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.