லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஜென் ஸீ-க்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளது பற்றி..

ஜென் ஸீ-க்களுக்கு முதல்வர் வாழ்த்து

ஜென் ஸீ-க்களுக்கு முதல்வர் வாழ்த்து

Published On :12 ஆகஸ்ட் 2026, 3:58 pm IST

நாட்டின் ஜென் ஸீ எனப்படும் இளைஞர்களுக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தன்னுடைய உளங்கனிந்த வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் தனிப்பெருங் கட்சியாக வென்ற தவெக, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்துள்ளது.

அப்போதே, தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவிக்கவில்லை என்று சில தவெக தொண்டர்கள் வருத்தம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்று முழுதாக மூன்று மாதங்களுக்குப் பிறகு, முதல்வர் விஜய் தனக்கு வாக்களித்த ஜென் ஸீ இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். காரணம், இன்று சர்வதேச இளைஞர்கள் நாள் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், நம்பிக்கையின் வெளிச்சமாக, மாற்றத்தின் முகவரியாகத் திகழும் இளைய சமுதாயத்திற்கு எனது உளங்கனிந்த சர்வதேச இளைஞர் நாள் வாழ்த்துகள்!

புதிய எண்ணங்கள், அஞ்சா நெஞ்சம், முடிவில்லா ஆற்றலால் உலகை நேர்மறையாக மாற்றும் வல்லமை இளைஞர்களாகிய உங்களிடம் மட்டுமே உள்ளது. சோதனைகளை வென்று, சாதனைகள் படைத்து தொடர்ந்து முன்னேறிச் செல்லுங்கள்!

உலகரங்கில் அனைத்துத் துறைகளிலும் நமது இளைஞர்கள் வெற்றியடைய எனது உளமார்ந்த வாழ்த்துகள்!

கனவுகள் நனவாகட்டும்!

சாதனைகள் தொடரட்டும்! என்று விஜய் பகிர்ந்துள்ளார்.

இன்று உலகம் முழுவதும் சர்வதேச இளைஞர்கள் நாள் கொண்டாடப்படுகிறது.

Summary

CM Vijay extends wishes to Gen Z Do you know what special

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.