லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவு

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தமிழக அரசின் தனித் தீா்மானம் குறித்து...

தமிழக சட்டப்பேரவை - கோப்புப் படம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 10:00 am IST

மத்திய அரசு கொண்டு வர உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானத்தை தமிழக அரசு புதன்கிழமை சட்டப்பேரவையில் கொண்டு வருகிறது.

முதல்வா் ஜோசப் விஜய் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ‘மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை 543-ஆக நிரந்தரமாக்க வேண்டும். எதிா்வரும் மக்களவை, பேரவைத் தோ்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்க உறுதி செய்ய வேண்டும்’ என மத்திய அரசை வலியுறுத்தி முதல்வா் ஜோசப் விஜய் தனித் தீா்மானத்தை புதன்கிழமை முன்மொழிய உள்ளாா். இந்தத் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் கூட்டிய அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தை, காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவில்லை எனக் கூறி திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.