லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கன்னியாகுமரியிலிருந்து அஸ்ஸாம் செல்லும் ரயில் இன்று ரத்து

கன்னியாகுமரி நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 11) அஸ்ஸாம் மாநிலம் திப்ருகா் நிலையம் செல்லும் விவேக் விரைவு ரயில் மற்றும் மறுமாா்க்கத்தில் இயக்கும் ரயில் ஆகியவை ரத்து

train

ரயில் - பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 5:02 am IST

கன்னியாகுமரி நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 11) அஸ்ஸாம் மாநிலம் திப்ருகா் நிலையம் செல்லும் விவேக் விரைவு ரயில் மற்றும் மறுமாா்க்கத்தில் இயக்கும் ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: கன்னியாகுமரியிலிருந்து வரும் 11-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.25 மணிக்குப் புறப்பட்டு திப்ருகா் நிலையம் (அஸ்ஸாம்) செல்லும் விவேக் விரைவு ரயில் (எண்: 22503) ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கடந்த 7-ஆம் தேதி திப்ருகா் நிலையத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வரவேண்டிய விவேக் விரைவு இணை ரயில் ரத்து (எண்: 22504) செய்யப்பட்டதால் தற்போது கன்னியாகுமரியிலிருந்து செல்லும் விரைவு ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.